மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் சிறிய வேடத்தில் நடித்து அதன்பிறகு அதே சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்தவர் அப்புக்குட்டி. அதையடுத்து மன்னாரு படத்திலும் நாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு இரண்டு நடிகைகள் ஜோடியாக நடித்தனர். பின்னர் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வந்த அப்புக்குட்டி தற்போது காகிதகப்பல், வாங்க வாங்க போன்ற படங்களில் மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார்.
மேலும், தற்போது குறிப்பிடத்தக்க நடிகராகிவிட்ட அப்புக்குட்டி தனக்கென ஒரு கார் வாங்கி விட்டார். அதில்தான் படப்பிடிப்புகளுக்கு சென்று வருகிறார். அதேசமயம், தான் சினிமாவில் நடிக்க போராடி வந்த காலகட்டத்தில் சென்னை சாலிகிராமத்தில்தான் திரையுலக நண்பர்களை சந்திப்பார். அந்த பகுதிகளுக்கு இப்போது தான் பெரிய நடிகரான பிறகும் அவ்வப்போது வந்து நின்று பழைய நண்பர்களை சந்திக்கிறார் அப்புக்குட்டி. அதோடு இப்போதும் முன்பு போலவே அந்த பகுதிகளில் உள்ள டீ கடைகளில் டீ வாங்கி நண்பர்களோடு நண்பராக அருந்துகிறார். அதோடு தனது பழைய நினைவுகளையும் நண்பர்களுடன் அசை போடுகிறார் அப்புக்குட்டி.