மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பழம்பெரும் நடிகர் நாகேஷ் தன்னுடைய சம்பாத்தியத்தில் சென்னை, தி.நகரில் கட்டிய திரையரங்கம் தியேட்டர் நாகேஷ். தியேட்டர் நாகேஷ் என்று பெயர் வைக்கப்பட்டாலும் மக்கள் அந்த திரையரங்கத்தை நாகேஷ் தியேட்டர் என்றே அழைத்து வந்தனர். வியாபாரிகள் நிறைந்த இடத்தில் அமைந்ததினாலோ என்னவோ நாகேஷ் தியேட்டர் வெற்றிகரமாக இயங்கவில்லை. எனவே நாகேஷ் திரையரங்கம் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமண மண்டபமாக மாற்றபட்டது.
தற்போது 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் ஒரு படம் உருவாக உள்ளது. ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரி இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது 'மானே தேனே பேயே', 'கடை எண் 6' ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், அறிமுக இயக்குனர் முகமது இசாக் இயக்கும் 'நாகேஷ் திரையரங்கம்' படத்திலும் நடிக்கவிருக்கிறார்!
சென்னை பாண்டி பஜாரில் இயங்கி வந்த நாகேஷ் தியேட்டர் போலவே பல திரையரங்கங்கள வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறியுள்ளன. இந்நிலையில் நாகேஷ் திரையரங்கத்தை பின்னணியாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. இந்தப்படத்தில் ஆரி ரியல் எஸ்டேட் ஏஜென்டாக நடிக்கிறாராம். முன்னாள் கதாநயகி நடிகையான பானுப்ரியா ஆரிக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.