ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக சறுக்கல்களை சந்தித்து வரும் நடிகர்கள், அதிலிருந்து மீண்டு வருவதற்காக வெற்றிப்பட நாயகிகள் மற்றும் முன்னணி நடிகைகளை தங்களது படங்களை இணைத்து வருகின்றனர். அந்த வகையில், நயன்தாரா, காஜல் அகர்வாலுடன் ஜீவா நடித்திருப்பது போன்று, ஆர்யாவும் தற்போது நடித்து வரும் கடம்பன் படத்தில் கேத்ரின் தெரசாவுடன் நடிப்பவர் அடுத்தபடியாக அமீர் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தில் முன்னணி ஹீரோயின் உடன் நடிக்க விரும்புகிறார்.
தற்போது கடம்பன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால் அந்த படத்தை முடித்ததும் அமீர் இயக்கும் படத்திற்காக அரிதாரம் பூசுகிறார் ஆர்யா. மேலும், ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப்பிறகு அமீர் நாயகனாக நடித்து வந்த பேரன்பு கொண்ட பெரியோர்களே படமும் கிடப்பில் கிடக்கிறது. ஆக, அமீரின் மார்க்கெட்டும் திருப்திகரமாக இல்லாததால் தாங்கள் இருவரும் இணையும் படத்தில் நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா போன்று முன்னணி நடிகைகள் யாரேனும் இருந்தால் படத்திற்கு நல்லது என்று நினைக்கிறார்களாம். அதனால் மேற்படி நடிகைகளிடம் அவர்கள் கால்சீட் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.