சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
6 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் மிளகா. நட்டி நடராஜ் நடித்த படம். பூங்கொடி என்ற புதுமுகத்துடன் ரவிமரியா, சிங்கம்புலி, சுஜா வாருணி, இளவரசு உள்பட பலர் நடித்திருந்தனர். சபேஷ் முரளி இசை அமைத்திருந்தார், பாலாஜி வி.ரங்கா ஒளிப்பதிவு செய்திருந்தார். ரவிமரியா இயக்கி இருந்தார்.
நட்டி நாளை, சக்கரவியூகம் படத்தில் நடித்திருந்தாலும் அதற்கு பிறகு அவருக்கு ஓரளவிற்கு அறிமுகத்தை கொடுத்த படம் மிளகா. இப்போது மிளகா படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ரவிமரியாவே இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஹீரோயின் தவிர மற்றவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்கள். தற்போது போங்கு படத்தை தயாரித்து வரும் ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
"இது மிளகா படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். ஆனால் மிளகா படத்தின் சாயல் இருக்கும். மிளகா படத்தின் வெற்றி பலருக்கு நல்ல இடத்தை கொடுத்தது. அதனால் அதை மீண்டும் இயக்குவதில் மகிழ்ச்சி. நானும் நடிப்பில் பிசியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி இந்தப் படத்தை இயக்குகிறேன். இப்போது நட்டிக்கு நல்ல ஒரு இமேஜ் இருக்கிறது. அதற்கு ஏற்றமாதிரி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது" என்றார் இயக்குனர் ரவிமரியா.