இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு |
உதயா கிரியேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் மேல்நாட்டு மருமகன். சின்னத்திரை தொகுப்பாளர் ராஜ்கமல், ஹீரோவாக நடிக்கிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரீயன் ஹீரோயினாக நடிக்கிறார். கே.கவுதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், வே.கிஷோர்குமார் இசை அமைக்கிறார்.
வெளிநாட்டு பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடிக்கும் ஒருவன். சுற்றுலா வரும் ஒரு வெளிநாட்டு பெண்ணின் மனதில் இடம்பிடித்து எப்படி திருமணம் செய்கிறான் என்பதுதான் கதை. இதன் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒரு பாடலை நா.முத்துகுமார் 33 நிமிடங்களில் எழுதி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.எஸ் கூறியதாவது: படத்தில் ஒரு வெளிநாட்டு பெண்ணை ஹீரோ வர்ணித்து பாடுவது போன்று ஒரு பாட்டு இடம்பெறுகிறது. இந்தப் பாட்டை நா.முத்துகுமார் எழுதினால் தான் நன்றாக இருக்கும் என்று கருதினோம். நானும், இசை அமைப்பாளரும் அவரை பார்க்கச் சென்றோம். அப்போது அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். "நான் அமெரிக்கா போகிறேன். வேறு யாரையாது வைத்து எழுதிக் கொள்ளுங்களேன்" என்றார்.
நீங்கள்தான் கட்டாயம் எழுத வேண்டும். அமெரிக்கா போய்வந்த பிறகு எழுதிக் கொடுங்கள் போதும் என்றோம். எங்கள் பிடிவாதம் அவர் மனதை மாற்றியது. சரி நான் ஏர்போர்ட்டுக்கு கிளம்பி விட்டேன். நீங்களும் என்னுடன் காரில் வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். அண்ணா நகரிலிருந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இசை அமைப்பாளர் மெட்டை சொல்ல சொல்ல நா.முத்துகுமார் எழுதினார். விமான நிலையத்துக்கு கார் 33 நிமிடத்தில் சென்று விட்டது. அதற்குள் முழு பாடலையும் எழுதி கொடுத்துவிட்டார்.
"யாரோ யார் இவளோ... சந்தோஷத்தின் பேர் இவளோ..." என்ற அந்த பாடலை இயற்கையான பின்னணியில் படமாக்கி உள்ளோம். என்றார் எம்.எஸ்.எஸ்.