பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கணிதன் படத்திற்கு பிறகு ருக்குமணி வண்டி வருது, செம போதை ஆகாத படங்களை முடித்த அதர்வா, தற்போது ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதலில் கலையரசன்தான் நடிப்பதாக இருந்தது. அவர் கபாலி படத்தில் பிசியாகி விட்டதால் அந்த வாய்ப்பு அதர்வாவுக்கு திரும்பியது. கலையரசன் வந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கலாம் என்றால், சூரியிடம் வாங்கிய கால்சீட் வேஷ்டாகி விடும் என்பதால் உடனடியாக அதர்வாவை புக் பண்ணி படப்பிடிப்பை தொடங்கினர்.
இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக 4 ஹீரோயினிகள் நடிக்கிறார்கள். அந்த வகையில், ரெஜினா, ப்ரணிதா, அருந்ததி நாயர் ஆகியோர் ஒப்பந்தமாகி விட்டனர். அடுத்தபடியாக இன்னொரு நடிகை தேடி வருகின்றனர். அதோடு, சூரிக்கும் இந்த படத்தில் ஒரு ஜோடி நடிகை இருக்கிறாராம். அதர்வா இந்த 4 நடிகைகளுடன் டூயட் பாட, சூரியும் தனக்கான நாயகியுடன் பாடல் காட்சிகளில் நடனமாடுகிறாராம். ஆக, இந்த காமெடி படத்தில் கிளுகிளுப்பூட்டும் ரொமான்ஸ் காட்சிகளும் அதிகமாக இடம்பெறுகிறதாம்.