Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித், ‛இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்'

19 ஆக, 2016 - 16:36 IST
எழுத்தின் அளவு:
Austria-newspaper-calls-Ajith-as-Indian-Sylvester-Stallone

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ஏகே 57 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவாவே மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சர்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கிறார்கள். காஜல் அகர்வால் ஹீரோயின். அக்ஷரா ஹாசன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.


இது ஹாலிவுட் படமான ஜேம்ஸ் பாண்ட் பட பாணியிலான கதை. அஜித் இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே தனக்கு வழங்கப்பட்ட ‛அல்டிமேட் ஸ்டார்', ‛தல' போன்ற பட்டங்களை எல்லாம் தனது பெயருக்கு முன்னால் பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவித்துவிட்டார் அஜித். இருந்தும் அவரது ரசிகர்கள் அவர்மீது உள்ள அன்பால் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தச்சூழலில், தற்போது அஜித்திற்கு புதிய பட்டம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதுவும் நம்மூர்காரர்களால் அல்ல வெளிநாட்டு பத்திரிகையாளர்கள்.


தற்போது அஜித்தின் 57-வது படம் ஆஸ்திரியா நாட்டில் நடக்கிறது. அங்குள்ள பத்திரிக்கை ஒன்று அஜித்திற்கு 'இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்' என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்துள்ளது. ஹாலிவுட் ஆக்ஷ்ன் ஸ்டாரான சில்வர்ஸ்டர் ஸ்டாலோனுக்கு சமமான புகழ் இந்தியாவில் அஜித்திற்கு இருப்பதாகவும், அதனால் இந்தப்படத்தை அவர்கள் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதனிடையே ஆஸ்திரியாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் அஜித் ஏற்கனவே நடித்து வரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே நடிக்கிறார். கிட்டத்தட்ட ஆரம்பம் படத்தில் பார்த்த அஜித்தே போன்று இந்தப்படத்திலும் அவர் இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in