ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். ஜெயம் கொண்டான் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கினார்.
அதற்கு பிறகு விஷ்ணு நடிப்பில் போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்ற படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வந்தது. ஆனால் விஷ்ணு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தற்போது சுசீந்திரன் படத்தில் நடித்து வருகிறார். கண்ணன் படத்திற்கு தேதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பி.சி.ஸ்ரீராமின் உதவியார் வி.என் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் செப்டம்பர் 12ந் தேதி முதல் தொடங்குகிறது. விஷ்ணு நடிக்க வேண்டிய படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.