ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போடா போடி படத்தில் நடிகையான வரலட்சுமி, பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் பேசப்படும் நடிகையானார். அதையடுத்து தமிழ், மலையாள படங்களில் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில், விஷாலுக்கும், அவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக மீடியாக்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்ட விஷாலும், வரலட்சுமி எனது சின்ன வயது தோழி என்று குறிப்பிட்டவர், எனது திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் என்று மட்டுமே தெரிவித்திருந்தார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் செய்தி வெளியிடவில்லை.
இதன்காரணமாக, விஷால்- வரலட்சுமி குறித்த திருமண செய்திகள் மீடியாக்களில் வேகமாக பரவியது. ஆனால் தற்போது இந்த செய்தியை திட்டவட்டமா க மறுத்துள்ளார் வரலட்சுமி. அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இபபோதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் என்னிடம் இல்லை. எனது முழுக்கவனமும் நடிப்பில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதில் மட்டுமே உள்ளது. அதனால் எனது திருமணம் குறித்த தவறான தகவல்களை யாரும் பரப்பி விட வேண்டாம் என்று டுவிட் செய்துள்ளார் வரலட்சுமி.