ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'காஜல் அகர்வால் அவ்வளவு தான்' என, கூறியவர்கள், இப்போது அவரது அதிரடியான, 'ரீ என்ட்ரி'யை பார்த்து, வாய் பிளந்து நிற்கின்றனர். தெலுங்கில், சிரஞ்சீவி நடிக்கும், 150வது படத்தில், அவருடன் டூயட் பாடப் போவது அம்மணி தான். 'வயதான நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவே மாட்டேன்' என்ற, பாலிசியை பின்பற்றி வந்த காஜல், இரண்டு கோடி ரூபாய் சம்பளம் என்றதும், உடனடியாக தலையசைத்து விட்டாராம். இதுதவிர, தமிழில், அஜீத் நடிக்கும் படத்திலும், ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்திலும் நடிக்கிறார். 'எனக்கு, 31 வயது தான் ஆகிறது. சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது; என்னை பற்றி வதந்தி பரப்பியவர்களின் வாயை அடைப்பேன்' என்கிறார் காஜல்.