ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் ஹீரோக்களையும், ஹீரோயின்களையும்தான் இந்தியத் திரையுலகம் திரும்பிப் பார்த்துள்ளது. அதோடு ஹிந்தித் திரையுலகம் தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்களை மட்டுமே அதிகம் இழுத்துக் கொண்டது. இங்கிருந்து எத்தனை திறமையான இயக்குனர்கள் அங்கு போனாலும் அரசியல் செய்து திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஆனால், தற்போது அது ஓரளவிற்குக் குறைந்துவிட்டது. இருந்தாலும் ஒரு பிராந்திய மொழித் திரைப்படத்தின் இயக்குனரை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இயக்குனர் ஷங்கருக்கு மட்டுமே உண்டு.
1993ம் ஆண்டு வெளிவந்த 'ஜென்டில்மேன்' படம் வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை, இனிமையான பாடல்கள், கலகல நகைச்சுவை என கமர்ஷியலாகவும் தரத்திலும் சிறந்த ஒரு படமாக விளங்கியது. யார் இந்தப் படத்தை இயக்கியது என அன்றே 'ஷங்கர்' என்ற தன்னுடைய பெயரைப் பேச வைத்தார் ஷங்கர். அன்றிலிருந்து இன்று வரை அந்தப் பேச்சு தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. 23 வருடங்களுக்கும் மேலாக திரையுலகத்தில் வெற்றிகரமான இயக்குனராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த 23 வருடங்களில் இதுவரை 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். சராசரியாக இரண்டு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே. நிறைய படங்களை எடுப்பதை விட நிறைவான படங்களை எடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள்.
தமிழ்த் திரைப்படங்களை உலக அளவில் பேச வைத்த இயக்குனர்களில் முதன்மையானவர். பிரம்மாண்டம் என்பது திரையில் எப்படித் தெரிய வேண்டும் என்பதை மற்றவர்களுக்கும் உணர்த்தியவர். லட்சங்களில் லாபங்களை சம்பாதித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை பல கோடிகளுக்கு மாற்றியவர். காலத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொள்பவனே எந்தத் துறையிலும் முன்னணியில் இருக்க முடியும் என்பதை புரிய வைத்திருப்பவர். '2.0' படத்திலும் தமிழ் சினிமாவை வேறொரு உலகத்திற்குக் கொண்டு செல்வார் என்று அனைவருமே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தயாரிப்பாளராக நல்ல படங்களையும் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள். தொடர்ந்து தமிழ் சினிமா பெருமைப்படும் படங்களைக் கொடுக்க அவரை வாழ்த்துவோம்.