மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம், நடன கலைஞராக அறிமுகமாகி நடிகர் ஆனவர். பல படங்களில் நடித்தார், 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். நடன இயக்குனராக பணியாற்றினார். சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். தற்போது மீண்டும் முழுநேர நடிகராக முடிவு செய்துவிட்டார். அதுவும் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
இயக்குனர் ஹரியின் உதவியாளர் பிரசாந்த் ஜி.சேகர் இயக்கும் ‛யானும் தீயவன்' படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளரும், வழக்கறிஞருமான ஜெரோம் புஷ்பராஜின் மகன் அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார். 'சதுரன்' படத்தில் நடித்த வர்ஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர பொன்வண்ணன், சந்தானபாரதி, விடிவி கணேஷ், மதுமிதா நடிக்கிறார்கள்.
“காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போகும் இருவர் கடைசி நேரத்தில் ஒரு சிறிய தவறால் வில்லன்களின் நெட் ஒர்க்கில் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதை. இதுவரை வில்லன் இமேஜ் விழாத ஒருவரை கொடூரமான வில்லனாக மாற்ற வேண்டும் என்ற முடிவு செய்தோம். அதனால் ராஜுசுந்தரத்தை அணுகினோம். எனக்கு காமெடி இமேஜ் தானே இருக்கிறது, நான் வில்லனாக நடித்தால் மக்கள் ரசிப்பார்களா, ஒரு பாட்டு கொடுங்க சூப்பரா ஆடிட்டு போறேன் என்றுதான் அவர் சொன்னார். நாங்கள் அவருக்கு நம்பிக்கையூட்டி நடிக்க வைத்தோம். இந்தப் படத்துக்கு பிறகு ராஜு சுந்தரம் வில்லனாக ஒரு ரவுண்டு வருவார்” என்கிறார் இயக்குனர் பிரசாந்த் ஜி.சேகர்.