ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்-அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே -என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதேபோல், அஜித்-விக்ரம் இருவரும் உல்லாசம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். 1997-ல் வெளியான இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற விளம்பரப்பட இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். அந்த படத்தில் மகேஸ்வரி நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு அஜித்- விக்ரம் இருவரும் இணையவில்லை. இந்நிலையில், மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் அஜித்துடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் விக்ரம்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், உல்லாசம் படத்தில் நடித்தபோதில் இருந்தே அஜித்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். மாஸ் ஹீரோவாகிவிட்ட அஜித்துடன் மீண்டும் நல்ல வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ள விக்ரம், தமிழ் ஹீரோக்களில் நல்ல அழகியலுடன் டிரஸ் அணிவதில் அஜித்துக்கு இணை யாருமில்லை. நல்லதொரு டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ள அழகான நடிகர் அவர் என்று கூறியுள்ளார்.