ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
‛டங்கல்' படத்தை தொடர்ந்து நடிகர் அமீர்கான், விஜய் கிருஷ்ணா இயக்கத்தில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ‛தக்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அமீர்கான் உடன் பாலிவுட்டின் மெகாஸ்டார் அமிதாப்பச்சனும் நடிக்கிறார். படத்தில் அமீர்கான் கொள்ளையனாக நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அமிதாப் உடன் நடிப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் அமீர்கான்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமீர்கான், அமிதாப் உடன் நடிப்பது பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛அமிதாப்பின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அமிதாப்புடன் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேற உள்ளது. அந்தநாளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.