14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆவது புதிய விஷயம் இல்லை. இளையராஜா பாவலர் கிரியேஷனை தொடங்கி நிறைய படங்களைத் தயாரித்தார். தற்போது யுவன் சங்கர் ராஜாவும் தயாரிப்பைத் தொடங்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, எஸ்.எஸ்.குமரன் ஆகியோர் ஏற்கனவே தயாரிப்பாளர் ஆகிவிட்டடார்கள் அந்த வரிசையில் வருகிறார் பிரகாஷ் நிக்கி.
'ரவுத்திரம்' படத்தில் அறிமுகமாகி பல படங்களுக்கு இசை அமைத்த பிரகாஷ் நிக்கி, 'ஸ்வதீப் சினிமா' என்ற நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கிறார். விஜய்ஸ்ரீ என்ற புதுமுகம் இயக்குகிறார், ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
“சினிமா தயாரிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. விஜய்ஸ்ரீ நல்ல கதையுடன் வந்தார். தயாரிப்பில் உதவ நண்பர்கள் வந்தார்கள் பணிகளை ஆரம்பித்து விட்டோம். நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் தரமான படம். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார் பிரகாஷ் நிக்கி.