ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை ஆர். பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரிக்கிறார். தயாரிப்பு பார்த்திபன் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் கிரவுட் ஃபண்டிங் என்கிற பலரது முதலீட்டில் தயாரிக்கப்படும் படம் இது.
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை இயக்கி நடிப்பதுடன் கயல் சந்திரனுடன் ஒரு படம், சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் மாவீரன் கிட்டு ஆகிய படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார் பார்த்திபன்.
கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை அடுத்து பார்த்திபன் தயாரிக்கும் படத்தை அவரது மகன் ராக்கி என்கிற ராதா கிருஷ்ணன் இயக்க உள்ளதாக ஒரு தகவல் அடிபடுகிறது. ராக்கி என்கிற ராதா கிருஷ்ணன் தற்போது ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். பிரபுதேவா, தமன்னா நடித்து வரும் தேவி படத்தின் அஸோஸியேட்டாக பணியாற்றி வரும் ராக்கி, முன்னணி ஹீரோக்கள் சிலரிடம் கதை சொல்லி இருக்கிறாராம்.