Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் 'அமர்க்களம்'

13 ஆக, 2016 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Ajith-fans-celebrating-Amarkalam

அஜித், ஷாலினி, நாசர், ரகுவரன், ராதிகா மற்றும் பலர் நடிக்க சரண் இயக்கத்தில் பரத்வாஜ் இசையமைப்பில் 1999ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த படம் 'அமர்க்களம்'. இப்படம் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆனதை அஜித் ரசிகர்கள் அமர்க்களமாகக் கொண்டாடி வருகிறார்கள். காலையிலேயே டிவிட்டரில் இது பற்றிய கொண்டாட்டத்தை டிரென்டிங்கில் கொண்டு வந்துவிட்டார்கள்.


அஜித் நடித்த முழுமையான முதல் ஆக்ஷன் படம் 'அமர்க்களம்' என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்திற்கு முன்னர் வரை அஜித் ஒரு காதல் நாயகனாக மட்டுமே வலம் வந்து கொண்டிருந்தார். அவரால் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர முடியுமா என்று அப்போது பலத்த சந்தேகம் இருந்தது. அவரைத் தேடி காதல் படங்கள் மட்டுமே அதிகம் வந்து கொண்டிருந்த நேரம் அது. இயக்குனர் சரண் துணிந்து அஜித்தை ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக 'அமர்க்களம்' படத்தில் நடிக்க வைத்தார்.


அஜித்துடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த ஷாலினிக்கும் காதல் மலர்ந்து இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். அஜித்துக்கு திரையுலக வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் திருப்புமுனையைக் கொடுத்த படமாக 'அமர்க்களம்' அமைந்தது.


அஜித்தை 'காதல் மன்னன்' ஆக மாற்றிய இயக்குனர் சரண் அவரை 'ஆக்ஷன் நாயகன்' ஆகவும் மாற்றினார். அதற்குப் பிறகுதான் அஜித்தை ஆக்ஷன் படங்களிலும் நடிக்க வைக்க மற்ற இயக்குனர்களும் முயற்சி செய்தார்கள்.


பரத்வாஜின் இசையில் பாடல்களும் ஹிட்டாக அமைந்தது. குடும்பம், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து ஒரு படமாக அமைந்த 'அமர்க்களம்' அஜித்தின் முக்கிய படங்களில் ஒன்றாக இன்னும் ரசிக்கப்பட்டு வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in