ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு முன்னால் ஆர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வந்தது. இப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவிற்கு மீண்டும் பழைய மெலிந்த தோற்றத்தைப் பெற அதிக உடற்பயிற்சி தேவைப்படுகின்றதாம். நாளில் பாதி நேரத்தை உடற்பயிற்சி கூடத்தில் செலவழிக்கும் அனுஷ்கா, அதனுடன் படப்பிடிப்பிலும் பங்கேற்பதால் அவருக்கு மிகுந்த சோர்வடைவதுடன் மனஅழுத்தமும் ஏற்படுகின்றதாம். இதனால் படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள இயக்குனர் ராஜமௌலியிடம் அனுஷ்கா கோரிக்கை விடுத்துள்ளாராம். பாகுபலி மட்டுமல்லாது, ஓம் நமோ வெங்கடேஷாயா, பாஹ்மதி போன்ற படங்களிலும் அனுஷ்கா நடிக்கின்றார்.