மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங்கின் தோனியின் வாழ்க்கை வரலாறு, பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார். நீரஜ் பாண்டே இயக்குகிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, பஞ்சாப்பின் ஜலந்தரில் உள்ள லவ்லி பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சுமார் 35 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடந்தது. படத்தின் டிரைலரை ரசிகர்கள் முன்னிலையில் தோனி வெளியிட்டார். அப்போது டிரைலரை பார்த்து ரசித்த தோனி, மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பாக அவரின் ‛ஹெலிகாப்டர் சாட்டை' வெகுவாக ரசித்தார் தோனி. மேலும் டிரைலரை ரசித்ததோடு தன் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அதோடு படக்குழுவினருக்கும் வாழ்த்தும் தெரிவித்தார்.