Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அடுத்தவர்களை பார்த்து காப்பி அடித்தால் காலியாகி விடுவோம்: பரீனிதி சோப்ரா

11 ஆக, 2016 - 07:32 IST
எழுத்தின் அளவு:
dont-copying-anyone

பஞ்சாப் அழகியான, பரீனிதி சோப்ரா நடிக்க வந்து, ஆறு ஆண்டுகளாகி விட்டன. இதுவரை, 10 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், வித்தியாசமான உடை அலங்காரம், மேக் அப், என, பாலிவுட்டின் பேஷன் தேவதையாக வலம் வருகிறார். அழகான தோற்றத்துக்காக, இவரிடம் 'டிப்ஸ்' கேட்கும் பாலிவுட் பிரபலங்கள் எண்ணிக்கை மிக அதிகம். பேஷன் மீது, தனக்குள்ள காதல் குறித்து, அவர் மனம் திறந்து பேசியதாவது:


உங்கள் அழகின் ரகசியம் என்ன?


நான் அழகாக இருப்பதாக கூறியதற்காக, முதலில் நன்றி. மேக் அப்பிற்காக, எந்தவித ரசாயனம் கலந்த கிரீமையும் நான் பயன்படுத்துவதே இல்லை. இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறேன். முகம் அலம்புவதற்கு கூட, சிலர், ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், நான் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறேன்.


உண்மையை சொல்லுங்கள்; நடிக்க வந்த புதிதில், அழகாக இருந்ததாக நினைத்தது உண்டா?


இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. நடிக்க வந்த புதிதில், மேக் அப் குறித்தோ, உடை அலங்காரம் குறித்தோ, என் தோற்றம் குறித்தோ அக்கறை காட்டியதே இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால், முதல் இரண்டு ஆண்டுகளில் வெளியான படங்களில், என் தோற்றத்தை பார்த்தால், இப்போதுகூட, வருத்தமாக இருக்கும். ஆனால், இப்போது முற்றிலும் மாறி விட்டேன். பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, எப்படிச் செல்ல வேண்டும். எந்த மாதிரியான உடையை அணிய வேண்டும் என்பதையெல்லாம் இப்போது கற்றுக் கொண்டேன்.


உங்களுக்கு பொருத்தமான உடை எது?


என் உடல் அமைப்பிற்கு ஏற்ற எந்த உடையும் பொருத்தமாகத் தான் இருக்கும். இப்போது, உடல் எடையை குறைத்துள்ளேன். அதனால், அதற்கு ஏற்ற உடைகளை அணிகிறேன்.


சக நடிகையரில், அழகாக உடை அணிவது யார்?


கங்கனா ரணாவத்தும், அனுஷ்கா சர்மாவும். புதுப் புது பேஷன்களை, 'அப்டேட்' செய்வதில், கங்கனாவை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை. அவரது உடை அலங்காரம், மேக் அப், ஹேர் ஸ்டைல் ஆகியவற்றை பார்த்து, பலமுறை மிரண்டு போயிருக்கிறேன். அதேபோல், அனுஷ்கா சர்மா, ஒவ்வொரு நாளும், வித்தியாசமான தோற்றத்துடன் வலம் வருவார்.


இளம்பெண்களுக்கு நீங்கள் தரும், 'டிப்ஸ்' என்ன?


முதலில், நம்மைப் பற்றிய தன்னம்பிக்கை வர வேண்டும். அடுத்தாக, நம்முடைய உடல் அமைப்பிற்கு, எந்த உடை பொருத்தமாக இருக்குமோ, அந்த உடையை மட்டுமே அணிய வேண்டும். அடுத்தவர்களை பார்த்து காப்பியடித்து, நம்முடைய மதிப்பை, நாமே கெடுத்து விடக் கூடாது. 'தீபிகா, அந்த உடையில் சூப்பராக இருந்தார்; அதேபோன்ற உடையை நானும் அணிவேன்' என, நினைத்தால், காலியாகி விடுவோம். நமக்கு எது, பொருத்தமாக இருக்குமோ, அந்த உடையை மட்டுமே அணிய வேண்டும்.


உங்களுக்கு பொருத்தமில்லாத உடை என, எதை கருதுகிறீர்கள்?


இப்போது, உடல் எடையை கணிசமாக குறைத்து விட்டேன். ஆனாலும், நீச்சல் உடை போன்றவற்றை என்னால், இப்போது அணிய முடியாது. அதற்கு இன்னும் எடையை குறைக்க வேண்டும். அந்த அளவுக்கு எடையை குறைத்தால், கண்டிப்பாக நீச்சல் உடை அணிவேன். படங்களிலும், அந்த உடையை அணிவேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in