ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் பப்ரி கோஸ். பெங்காளி நடிகையான இவர் அதன்பிறகு ஓய் படத்தில் நடித்தவர், இப்போது துப்பறியும் சங்கர், விஜய் -60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டர் மற்றும் பாடல் காட்சியில் நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அடுத்தபடியாக புதிய படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறார் பப்ரி கோஸ். இந்நிலையில் அப்புக்குட்டி தற்போது நாயகனாக நடித்து வரும் காகிதக்கப்பல் படத்தில் முதலில் பப்ரி கோஸைதான் நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்றிருக்கிறது. ஆனால், அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க ஆசைப்படும் அவர், அப்புக்குட்டி நாயகன் என்றதும் நடிக்க மறுத்து விட்டாராம். அதையடுத்து தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், கதை கேட்பதற்கு முன்பு ஹீரோ யார் என்பதை கேட்டறிந்து தனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே மேற்கொண்டு கதை கேட்கிறாராம் பப்ரி கோஸ்.