ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் தற்போது நடித்து வரும் படம் போங்கு. ஆர்.டி இன்பினிட்டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை தாஜ் இயக்குகிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
இது ஹெடெக்காக கார்களை திருடும் திருடர்களின் கதை. இதில் நட்டி ஜோடியாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகை ரூஹி சிங். ராஜஸ்தானை சேர்ந்த இவர் மாடலாக இருந்து தி வேர்ல்ட் பிபோர் ஹெர் என்ற ஆங்கில படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு காலண்டர் கேர்ள்ஸ், இஷ்க் போரெடவர் என்ற இந்திப் படங்களில் நடித்தார். தற்போது தமிழுக்கு வந்துள்ளார். காலண்டர் கேர்ள்ஸ் படத்தில் நீச்சல் உடையில் நடித்து கலக்கியவர்.
போங்கு படத்தில் கார் திருடுகிறவராகவும், நட்டியின் காதலியாகவும் நடித்து வருகிறார். நட்டி, ரூஹி சிங் தவிர அர்ஜுன், அதுல் குல்கர்னி, ராம்தாஸ், ஷரத் லோகித்தாஸ், மயில்சாமி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். போங்குவிற்கு பிறகு தமிழில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ரூஹி சிங்.