மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தற்போது சிம்பு நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிம்பு அப்பா- இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் நடிக்கிறார். முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்பு, முதல்கட்டமாக அப்பா வேடத்துக்கான காட்சிகளில் நடித்து முடித்து விட்டார். கதைப்படி, இந்த வேடத்தில் நடித்துள்ள சிம்பு, ஜெயில் கைதியாக இருப்பாராம். அப்போது ஜெயிலில் இருந்து தப்பித்து வரும்போது போலீசார் அவரை சுட்டு கொன்று விடுவார்களாம்.
இந்த கெட்டப் 1985ல் நடப்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். அதனால், அந்த காலகட்டத்து காஸ்டியூமான பெல்ஸ் மற்றும் ஸ்டெப் கட்டிங் வைத்து நடித்திருக்கிறாராம். மேலும், டைட்டான சட்டையில் பெரிய அளவில் காலர் வைத்து 85-களில் ரஜினி, கமல் நடித்த கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். அந்த சமயத்தில் வெளியான சினிமா பாடல்கள்கூட ஆங்காங்கே கேட்பது போன்று காட்சிகளை அமைத்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன், டிரிபிள் ஏ படத்துக்காக சிம்பு நடித்துள்ள அப்பா கெட்டப் முழுக்க திண்டுக்கல்லில் நடப்பது போன்று படமாக்கியிருக்கிறார்.