காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
கபாலி படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் வின்ஸ்டன் சாவோ. ஜாக்கி சான் ஹீரோவாக நடிக்க சாவோ வில்லனாக நடித்த ஸ்கிப் டிரேஸ் படம் கபாலி வெளியான அன்று சீனாவில் வெளியானது. ஜாக்கி சாவோ தவிர பிங் பிங் பென், ஜானி கினாக்ஸ்வில்லே, ஆகியாரும் நடித்துள்ளனர், டை ஹார்ட், கிளிபிங்கர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ரென்னி ஹார்லின் இயக்கி உள்ளார்.
சீனாவில் மட்டும் வெளியாகி உள்ள இந்தப் படம். அங்கு ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் இந்தியாவிலும் பிற வெளிநாடுகளிலும் செப்டம்பர் 2ந் தேதி வெளிவருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. தமிழில் படத்திற்கு இரு கில்லாடிகள் என்று பையர் வைத்திருக்கிறார்கள். சன்மூன் பிக்சர்ஸ் சார்பில் விஸ்வாஸ் சுந்தர் இந்தப் படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.