மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'சவுகார்பேட்டை' படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் தற்போது இயக்கி வரும் படம் 'பொட்டு'. இதில் பரத் ஹீரோவாக நடிக்கிறார், இனியா, நமீதா, சிருஷ்டி டாங்கே ஹீரோயின்கள், சவுகார் பேட்டை படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். அம்ரீஷ் இசை அமைக்கிறார், இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இது மருத்து கல்லூரி பின்னணியில் நடக்கும் திகில் மற்றும் பேய் கதை. ஒரு ஆதிவாசி பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆனால் அதனை விரும்பாத அந்த கல்லூரி நிர்வாகம் அவளை டார்ச்சர் பண்ணி கொலை செய்து தற்கொலை நாடகமாடிவிடுகிறது. அதனால் காலியாகும் சீட்டை கோடிக் கணக்கில் விற்கிறது. இறந்த அந்த ஆதிவாசி பெண் ஆவியாக வந்து எப்படி பழிவாங்குகிறாள் என்பது கதை என்று கசிந்திருக்கிறது. இதில் ஆதிவாசி பெண்ணாக இனியா நடிக்கிறார்.
ஆதிவாசி மக்களின் இளவரசியான இனியாவை அந்த மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்கிற காட்சி கொல்லி மலை உச்சியில் ஆதிவாசிகள் கிராமத்தை உருவாக்கி அதில் படப்பிடிப்பு நடந்தது. இதில் பரத், நமீதா, இனியா, நிகேஷ்ராம், ஆர்யன் கலந்து கொண்டு நடித்தார்கள். பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.