ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திரையுலகத்தைப் பொறுத்தவரை முன்னணியில், அதாவது நம்பர் 1 இடத்திற்குப் போட்டி போடும் நாயகிகள் முன்னணி கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேருவார்கள். அறிமுக நாயகன் படத்திலோ அல்லது வளர்ந்து வரும் நாயகர்கள் படத்திலோ ஜோடி சேரவே மாட்டார்கள். இருந்தாலும் தயாரிப்பாளராக இருந்து உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா. அதன் பின்னும் தான் நாயகனாக நடித்த படங்களில் முன்னணி நடிகைகளை மட்டுமே தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தவர் உதயநிதி.
'இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா' படங்களில் அவருடைய ஜோடியாக நயன்தாரா நடித்தார். 'கெத்து' படத்தில் எமி ஜாக்சனும், 'மனிதன்' படத்தில் மீண்டும் ஹன்சிகாவும் ஜோடியாக நடித்தனர்.
உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்க உள்ள இரண்டு படங்களில் அவருடைய ஜோடியாக முன்னணி ஹீரோயின்கள் நடிக்கவில்லை. டாப் லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்களை விட்டு விலகி அவர் வளர்ந்து வரும் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
லைகா தயாரிப்பில் கௌரவ் இயக்கும் படத்தில் மஞ்சிமா மோகன் , உதயநிதி ஜோடியாக நடிக்கிறார். மஞ்சிமா நடித்து இதுவரை ஒரு படமும் வெளிவரவில்லை. அவர் நாயகியாக அறிமுகமாகும் 'அச்சம் என்பது மடமையடா' இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து எழில் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க உள்ள படத்தில் ரெஜினா, சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடிக்க உள்ளார்கள். இவர்களிவரும் இன்னமும் தமிழில் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்கவில்லை. டாப் ஹீரோயின்களை விட்டு அடுத்த கட்ட ஹீரோயின்களுடன் உதயநிதி ஜோடியாக நடிப்பது கோலிவுட்டிலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.