ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பம்பாய் உட்பட பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ராஜீவ்மேனன். பிறகு பிரபுதேவா, அரவிந்த்சாமி நடித்த 'மின்சாரக்கனவு', அஜித், அப்பாஸ், மம்முட்டி நடித்த 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' என இரண்டு படங்களை இயக்கினார். அதன் பிறகு தன்னுடைய பெயரிலேயே திரைப்பட பயிற்சிப்பிள்ளையை தொடங்கி நடத்தி வருகிறார். காக்கா முட்டை மணிகண்டன் இங்கு பயின்றவர்தான்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன். 'மின்சாரக்கனவு', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் படம் இது. ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு', 'புரூஸ்லீ', 'கெட்ட பையன் இந்த கார்த்தி' முதலான படங்களில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் , அதன் பிறகு இந்தப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இப்படத்திற்கும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்! இப்படம் ஒரு மியூசிகல் சப்ஜெட் என்பதால் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெறுகிறதாம். இவற்றில் 4 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி விட்டாராம். மற்ற பாடல்களின் வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க 'பிரேமம்' புகழ் சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகிறது.