ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காவலன் படத்தில் அசினின் பாடிகார்டாக நடித்த விஜய்யின் உதவியாளராக வடிவேலு நடித்திருந்தார். அவர்களது காமெடி நன்றாக ஒர்க்அவுட்டாகியிருந்தது. அதைப்பார்த்துதான், தெறி படத்திலும் விஜய்யின் டிரைவரான போலீஸ் வேடத்தில் நடிக்க வடிவேலுவை அழைத்தனர். ஆனால் அப்போது அவர் ஹீரோவாக நடிப்பதிலேயே ஆர்வமாக இருந்தார். அதனால் வடிவேலு நடிக்க வேண்டிய வேடத்துக்கு மொட்டை ராஜேந்திரனை அழைத்தனர். அதுவும் 60 நாட்கள் மொத்த கால்சீட் கேட்ட அட்லி, இந்த நாட்களில் நான் எப்போது அழைத்தாலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிசனாக கூறியிருந்தார். அதனால், விஜய் படத்தை விட மனமில்லாமல் அந்த நேரத்தில் சில படங்களுக்காக வாங்கியிருந்த அட்வான்சை திருப்பிக்கொடுத்தார் ராஜேந் திரன்.
இந்த நிலையில், தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் எங்க வீட்டுப்பிள்ளை படத்திலும் தற்போது இணைக்கப்பட்டுள்ளார் மொட்டை ராஜேந்திரன். இந்த படத்தைப்பொறுத்தவரை தற்போது அவர் நடித்து வரும் டிராபிக் போலீஸ் வேடத்தில் வேறொரு மலையாள நடிகரைத்தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் பரதன். ஆனால் தெறி படத்தில் மொட்டை ராஜேந்திரனின் நடிப்பு சிறப்பாக இருந்ததால், அவருக்கே இந்த வாய்ப்பினை கொடுக்கலாம் என்று கூறினாராம் விஜய். அதன்காரணமாக திடீரென்று எங்க வீட்டுப்பிள்ளை யில் இணைந்திருக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.