ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொடி, தொடரி படங்களில் நடித்து முடித்து விட்ட தனுஷ், தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். மேலும், பாடகர், பாடலாசிரியர் என்றும் செயல்பட்டு வருபவர் இன்னொரு பக்கம் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில், தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தை தானே தயாரித்து நடித்த தனுஷ், தொடர்ந்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி, நானும் ரெளடிதான், தங்கமகன், விசாரணை, அம்மா கணக்கு என பல படங்களை தயாரித்தவர், தற்போது தான் நடிக்கும் கொடி, என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களையும் தயாரித்து, நடித்து வருகிறார்.
மேலும், இப்படி தொடர்ச்சியாக தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்து வரும் தனுஷ், அந்த படங்களுக்கான போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளுக்காக தற்போது சென்னையிலுள்ள அடையாறில் ஒரு ஸ்டுடியோ திறந்துள்ளார். 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டுடியோவில் அவர் தயாரிக்கும் படங்களின் எடிட்டிங், டப்பிங், சவுண்ட் எபெக்ட்ஸ், பாடல், பின்னணி இசை ரெக்கார்டிங் என அனைத்து பணிகளும் நடக்கிறதாம். அவர் தயாரிக்கும் படங்களின் வேலை முடிந்து ஸ்டுடியோ ப்ரீயாக இருக்கும்போது அவர் மற்ற கம்பெனிகளுக்காக நடிக்கும் படங்களின் இறுதிகட்ட பணிகளும் இந்த ஸ்டுடியோவில் அவ்வப்போது நடக்கிறதாம்.