ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவா இயக்கத்தில் நடித்து நடிக்கும் 57வது படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகிறது. இந்த படத்தில் அஜித்துடன் காஜல்அகர்வால், அக்சராஹாசன், சதீஷ் உள்பட பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பல்கேரியா நாட்டில் தொடங்குகிறது. அதையடுத்து ஐரோப்பாவிலும் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
மேலும், தொடர்ந்து 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் நிலையில், படக்குழுவினர் இப்போதே அங்கு செல்லத் தொடங்கி விட்டனர். அடுத்த மாதம் முதல் வாரத்தில் அஜித் பல்கேரியா செல்கிறார். மேலும், அஜித் 57-வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பல்கேரியா நாட்டிலுள்ள nu boyana -என்ற பிரமாண்ட ஸ்டுடியோவில் தொடங்குகிறதாம். கிழக்கு ஐரோப்பா நாடுகளின் மிகப் பெரிய இந்த ஸ்டுடியோவில்தான் பல பிரமாண்ட ஹாலிவுட் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறதாம். அந்த வகையில், அஜித் படமும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரமாண்ட படமாக உருவாகும் என்று தெரிகிறது.