ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயம்ரவி ஹன்சிகா நடித்த 'ரோமியோ ஜூலியட்' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லக்ஷ்மன். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது 'போகன்' என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ஜெயம் ரவிதான் ஹீரோ. அவரது அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.
போகன் படத்தை இயக்கி வரும் லக்ஷ்மணிடம் பேட்டி எடுத்த ஒரு நிருபர், “உங்கள் முதல் 2 படங்களிலும் ஜெயம் ரவி தான் நாயகன். 3 வது படத்தையும் அவரை வைத்து தான் இயக்குவீர்களா?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த இயக்குநர் லக்ஷ்மன், “ ஒருவேளை ரஜினி சார் என்னை அழைத்து ஒரு படம் இயக்கச் சொன்னார் என்று வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் ஜெயம் ரவி என்னை அழைத்து அவருக்காக ஒரு படத்தை இயக்கச் சொன்னால் கண்டிப்பாக ஜெயம் ரவி படத்தைத்தான் இயக்குவேன்.” என்று கூறி இருக்கிறார்.
தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு அளித்து வரும் ஜெயம் ரவியை உயர்த்தி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் லக்ஷ்மண் சொன்ன பதிலில் ரஜினியை குறைத்து மதிப்பிடுவதுபோன்ற தொனி இருக்கிறது. இதைக் கண்ட ரஜினி ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் லக்ஷ்மணை கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர். வெளிப்புற படப்பிடிப்பில் ரஜினி ரஜினி ரசிகர்களின் கண்ணில் படாமல் இருப்பதுன் லக்ஷ்மணுக்கு நல்லது.