பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாள் அன்று 100 கோடி வரை வசூலித்திருப்பதாக அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறினார். இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
'கபாலி' படம் உலகம் முழுவதும் 8 ஆயிரம் தியேட்டர்களுக்குமேல் திரையிடப்பட்டது. அமெரிக்காவில் 480 தியேட்டர்களிலும், மலேசியாவில் 490 தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் 'கபாலி'யை மக்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றார்கள். முதல் நாள் வசூல் பற்றிய முறையான தகவல்கள் வரவில்லை. என்றாலும் எனக்கு கிடைத்த தகவல்களின்படி முதல் நாள்வசூல் 100 கோடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்திய நடிகர் ஒருவரின் படம் உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடப்பட்டதும், அதிக வசூலை கொடுத்ததும் 'கபாலி'தான். முதல் நாள் அன்றே சில இணைய தளங்களில் கபாலி வெளிவந்து விட்டபோதிலும் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. என்றார் தாணு.