ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலக புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், நடிகர் நடிகைகள், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான சூப்பர் ஹீரோக்களின் சிலைகளை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பும் நிறுவனங்கள் சீனாவில் செயல்படுகிறது. அந்த நிறுவனங்களில் இப்போது தயாராகிக் கொண்டிருக்கறது. 'கபாலி' சிலைகள். ஆயிரக்கணக்கில் தயாராகியுள்ள கபாலி சிலைகள் தற்போது சீனாவில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு வந்த கொண்டிருக்கிறது.
'கபாலி' படத்தை தயாரித்துள்ள வி.கிரியேஷன் இந்த சிலைகளுக்கான ஆர்டரை கொடுத்துள்ளது. பொம்மையின் சாம்பிள்கள் இப்போது வி.கிரியேஷனுக்கு வந்து சேர்ந்துள்ளது. விரைவில் பொம்மைகள் வந்து சேர இருக்கிறது. ஒவ்வொரு சிலையும் ஆறரை இன்ஞ் உயரம் கொண்டதாக இருக்கும். அதன் கீழ் கபாலி என்று எழுதப்பட்டிருக்கும். இந்த சிலைகள் சுமார் ஆயிரம் ரூபாய் வரை விற்க வாய்ப்பிருக்கிறது. கபாலிக்கு விளம்பர ஸ்பான்சர்களாக இருந்த நிறுவனங்கள் மூலமும். முன்னணி ஆன்லைன் நிறுவனங்கள் மூலமும் விற்கப்பட இருக்கிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியுள்ளது.