ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவின் மிக வித்தியாசமான நடிகர் லூஸ் மோகன். சாதாரண நடிகராகவே வாழ்க்கையை துவங்கி சாதாரண நடிகராகவே மறைந்து போனவர். சென்னை மயிலாப்பூர்தான் சொந்த ஊர். தெருக்கூத்தில் கோமாளி வேஷம் போட்டு பிழைத்த குடும்பம். லூஸ் மோகனின் அப்பா ஆறுமுகம் ஊமை படங்களின் காலத்தில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் முதன் முதலாக பேசும் படம் ஒன்றில் நடித்தார். அது 'லூஸ்&டைட்' என்ற காமெடி படம். ஹாலிவுட்டில் லாரல்&ஹார்டி நடிக்கும் மாதிரியான படம். அதில் தசரதராவ் என்பவர் குண்டாக இருப்பார் அவர் டைட்டாக நடித்தார். ஆறுமுகம் ஒல்லியாக இருந்ததால் லூஸ் கேரக்டரில் நடித்தார்.
பிற்காலத்தில் வந்த கவுண்டமணி-செந்தில் ஜோடி மாதிரி இந்த 'டைட்-லூஸ்' கேரக்டரில் இவர்கள் பல படங்களில் நடித்தார்கள். இதனால் ஆறுமுகத்தின் பெயரின் முன்னால் 'லூஸ்' ஒட்டிக் கொண்டது. தந்தை வழியில் சினிமாவில் நடிக்க வந்த மோகனுக்கு முன்னாலும் 'லூஸ்' ஒட்டிக் கொண்டதால் 'லூஸ் மோகன்' என்றே அழைக்கப்பட்டார். ஒரு படத்துக்கு 3 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்தவர் கடைசியாக நடித்தது 3 ஆயிரம் சம்பளத்திற்குத்தான்.