Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வந்துவிட்டார் ‛கபாலி... உலகம் முழுக்க ரசிகர்கள் கொண்டாட்டம்

22 ஜூலை, 2016 - 07:49 IST
எழுத்தின் அளவு:
Kabali-released-world-wide-:-Fans-celebration

கபாலி.... கபாலி.... கபாலி... எங்கு பார்த்தாலும் இதே பேச்சு... அனைத்து இடங்களிலும் கபாலி பற்றிய பேச்சுக்களும், தகவல்களும், செய்திகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அப்படி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கபாலி படம் ரிலீஸாகிவிட்டது. உலகம் முழுக்க கபாலிக்கான ரசிகர்கள் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில், ரஞ்சித்தின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கபாலி. ரஜினி கொஞ்சம் வித்தியாசமாக இன்றைய இளம் கலைஞர்களுடன் பணியாற்றியிருக்கிறார். மலேசியாவில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் டானாக ரஜினி நடித்திருக்கிறார்.


இப்படத்தின் டீசரில் தொடங்கி படத்தின் வியாபாரம், விளம்பரம், டிக்கெட் விற்பனை என படத்தை வேறு ஒரு தளத்திற்கு அனைவருமே கொண்டு சென்றுவிட்டனர். டிக்கெட்டுகள் முன் பதிவு, வெளி மாநில வெளியீடு, வெளிநாடுகளில் வெளியீடு என திரையுலக வரலாற்றில் கபாலிபடம் பற்றிய ஒரு புதிய சரித்திரம் எழுதப்பட்டுள்ளது.


படத்தின் முதல் பிரீமியர் ஷோ மலேசியாவில் ஆரம்பமானது. தொடர்ந்து சிங்கப்பூரிலும், அதனைத்தொடர்ந்து வளைகுடா நாடுகளிலும் கபாலி ரிலீஸானது. இந்திய ரசிகர்களுக்கு இன்று தான் கபாலி விருந்து படைத்தது. காலை 4 மணிக்கு முதல் ஷோ ஆரம்பமானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம்... என கபாலியை வரவேற்றனர். தியேட்டர்களுக்கு முன்னர் பட்டாசு, கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம், தேங்காய் உடைப்பு, கற்பூரம் ஏற்றுதல்... ரஜினியின் கபாலியை ரசிகர்கள் தீபாவளி போன்று வரவேற்றனர்.


தியேட்டர்களில் ரசிகர்கள் முழுக்க கபாலி டீ-சர்ட் உடனேயே வலம் வந்தனர். பலரும் முன்பதிவு செய்திருந்தாலும் ஒரு ஷோ முடியும் முன்னரே ரசிகர்கள் ஏராளமானபேர் தியேட்டர்களில் குவிந்தனர். தியேட்டர்களில் கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. கபாலி பிளக்ஸ்கள் தியேட்டர்களை மறைக்கும் அளவுக்கு வைத்திருந்தனர். கிராமங்களில் இருந்து அதிகமானபேர் நகரங்களை நோக்கி படையெடுத்தனர், இதனால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தியேட்டர்களில் வாகனம் நிறுத்த போதிய இடம் இல்லாததால் ரசிகர்களின் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தின. பல இடங்களில் பல ஊர்களில் கபாலியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


மொத்தத்தில் கபாலி படம் ரிலீஸ்.... ரசிகர்களுக்கு கபாலிடா... மகிழ்ச்சிடா.... தீபாவளிடா...!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in