ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் இனி வரும் காலங்களில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தென்னிந்திய நடிகர்கள் பலரும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகவே மற்ற மொழி ஹீரோக்கள் அவரவர் மொழிகளில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியதேயில்லை. பதிலுக்கு இங்குள்ள ஹீரோக்கள் நடித்த தமிழ்ப் படங்கள் நேரடியாகவே கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியாகி வசூலை அள்ளுகிறது. தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெறுகிறது.
ஹிந்தியிலிருந்து அக்ஷய் குமார் 2.0 படம் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மலையாளத்திலிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ள மம்முட்டி தற்போது 'பேரன்பு' படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
கன்னடத்திலிருந்து 'முடிஞ்சா இவன புடி' படம் மூலம் நாயகனாக நுழைகிறார் சுதீப். தெலுங்கிலிருந்து மகேஷ்பாபு அடுத்து தயாராகி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திற்காக 'மேக்கப் டெஸ்ட்' வேலைகள் அவருக்கு ஆரம்பமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். மேலும் தெலுங்கிலிருந்து இன்னும் சில ஹீரோக்களும் தமிழுக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
'கபாலி' படத்தின் உலகளாவிய தாக்கம் இன்னும் பலரையும் இந்தப் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளது.