ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'வெற்றிவேல்' படத்திற்கு பிறகு சசிகுமார் நடிக்கும் படம் 'கிடாரி'. இதில் சசிகுமார் ஜோடியாக வெற்றிவேல் படத்தில் நடித்த நிகிலா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அபிநயா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நெப்போலியன் நடிக்கிறார். இவர்களுடன் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் வேல ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ர என்ற ஆகியோர் நடிக்கிறார்கள். வேல ராமமூர்த்தி மதயானைகூட்டத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். மற்ற இருவரும் இதில் அறிமுகமாகிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார் தர்புகா சிவா இசை அமைக்கிறார். பிரசாத் இயக்குகிறார்.
'கிடாரி' வழக்கமான சசிகுமாரின் கிராமத்து ஆக்ஷன் கதை. காமெடி செண்டிமெண்ட், உருக வைக்கும் கிளைமாக்ஸ் எல்லாம் உண்டு. கிடாரி என்பது இளம் துடிப்பான ஆட்டை குறிக்கும். படத்தில் சசிகுமார் பெயர் கிடாரி. 60 நாட்களில் படத்தை எடுத்து முடித்து விட்டு தற்போது பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் இறுதியில் படம் வெளிவரும் என்று தெரிகிறது.