ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயசேதுபதி நடித்த நானும் ரெளடிதான் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி காமெடி யனாக நடித்தார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி படங்களில் காமெடியன்கள் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது விஜயசேதுபதி நடித்துள்ள தர்மதுரையில் கஞ்சா கருப்பு, றெக்க படத் தில் சதீஷ், ஆண்டவன் கட்டளையில் யோகிபாபு ஆகிய காமெடியன்கள் நடித் துள்ளனர். இவர்கள் படம் முழுக்க விஜயசேதுபதியுடன் வரும் நண்பர் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அதனால் இதுவரை விஜயசேதுபதி நடித்த படங்களை விடவும் இந்த படங்களில் காமெடி தூக்கலாம் உள்ளதாம்.
இதையடுத்து தான் நடிக்கும் படங்களிலும் காமெடியனுக்கு வாய்ப்பு இருந்தால் ஒரு நல்ல காமெடியனை போடுங்கள் என்று டைரக்டர்களிடம் சொல்கிறாராம் விஜயசேதுபதி. காரணம், தான் நடிக்கும் படங்களில் பிற்பகுதி சீரியசாக இருந்தாலும், முதல்பாதி கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் விஜய சேதுபதி. அதனால், இதுவரை கதைகளில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தவர் இப்போது காமெடி காட்சிகளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்கிறாராம். இப்படி விஜயசேதுபதி காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சேதி அறிந்த சில மெகா காமெடியன்கள் அவரது புதிய படங்களில் இடம்பெறுவதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.