Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் ரசிகர்களுக்கு நற்செய்தி - விரைவில் 'விஸ்வரூபம்-2' ரிலீஸ்

20 ஜூலை, 2016 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Soon-Vishwaroopam-2-will-be-release

கமல் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' படத்துக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்படத்துக்கு அநியாயத்துக்கு பப்ளிசிட்டி கிடைத்தது. அந்த பப்ளிசிட்டி காரணமாகவே 'விஸ்வரூபம்' படத்துக்கு வெற்றி கிடைத்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடிக்க ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் 'விஸ்வரூபம் 2' படம் தயாரானது. பாதி படம் வளர்ந்த நிலையில் 'விஸ்வரூபம்-2' படம் முடங்கிப்போனது. 'விஸ்வரூபம்-2' படம் எப்போது ரிலீசாகும் என்று ஏங்கி தவித்த கமல் ரசிகர்களும் ஒருகட்டத்தில் அதை மறந்துவிட்டனர்.


இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி! தற்போது 'சபாஷ் நாயுடு' படத்தை இயக்கி, நடித்து வரும் கமல்ஹாசன் 'விஸ்வரூபம்-2' படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அதற்கான வேலைகளை வேகப்படுத்தியுள்ளாராம். அதாவது தீபாவலிக்கோ அல்லது அதற்கு முன்னரோ 'விஸ்வரூபம்-2' படத்தை ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம்.


தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் பொருளாதார ரீதியில் நலிவடைந்துவிட்டதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு 'விஸ்வரூபம்-2' படத்தை தானே வெளியிட இருக்கிறாராம் கமல்!


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள 'முடிஞ்சா இவன புடி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாசனை அழைக்க சென்ற கே.எஸ்.ரவிகுமாரிடம் 'விஸ்வரூபம்-2' படத்தின் டிரெய்லரை போட்டுக்காட்டிய கமல்ஹாசன் 'விஸ்வரூபம்-2' படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறியுள்ளார்.


இதனால் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' படத்துக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்!.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in