ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கபாலி படம் இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாக இருக்கிறது. ஆனால் படத்தை தடை செய்ய கோரி வழக்கு மேல் வழக்கு பதிவாகி கொண்டிருக்கிறது. நேற்று தான் கபாலி படத்திற்கு டிக்கெட் கட்டணம் அதிகமாக விற்கப்படுகிறது என்று சென்னையை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை கோர்ட் உத்தரவிட்டது. இதுதவிர தவிர மதுரையில் கபாலி படத்தில் சர்ச்சையான பாடல் உள்ளது என்று நேற்று ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில் இன்றும் இப்படத்திற்கு தடை கோரி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பழைய லிங்கா பிரச்னையால் ஏற்பட்ட வழக்கு. ரஜினி நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் வெளியான லிங்கா படம் நஷ்டம் அடைந்ததாக விநியோகஸ்தர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். இதுதொடர்பாக பல பிரச்னைகள் நடந்தது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் லிங்கா பிரச்னை தொடர்பாக உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும், எனவே இழப்பீடு வழங்காமல் கபாலி படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கோரி சுக்ரா பிலிம்ஸ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இதுதொடர்பாக நாளைக்குள் விளக்கம் அளிக்க சொல்லி நடிகர் ரஜினிகாந்த், லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கை நாளைக்கு தள்ளி வைத்தது கோர்ட்.