சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாக்யராஜின் மகன் என்கிற விசிட்டிங் இருந்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாதவர் சாந்தனுதான். சுப்பிரமணியபுரம் உட்பட பல படங்கள் முதலில் சாந்தனுவைத்தான் தேடிச்சென்றன. அதை மாத்து.. இதை மாத்து என்று சொன்னதால் கடைசியில் சாந்தனுவை மாற்றிவிட்டு வேறு கதாநாயகர்களை வைத்து வெற்றிப்படம் கொடுத்தனர்.
இப்படி நல்ல படங்களை இழந்த சாந்தனு கடைசியில் தங்கர்பச்சான் இயக்கத்தில் 'அம்மாவின் கைபேசி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதுவே சாந்தனுவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதன்பிறகு, பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இப்படத்தை அடுத்து சாந்தனு நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிற படம் 'முப்பரிமாணம்'. இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர்கள் கதிர், பாலா ஆகியோரிடம் பணிபுரிந்த அதிரூபன் என்ற புதியவர் இயக்கும் இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'முப்பரிமாணம்' விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸரை இன்று மாலை 5 மணிக்கு 'ஜெயம்' ரவி வெளியிட இருக்கிறார். சாந்தனுவுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இதை செய்ய ஒப்புக்கொண்டாராம் ஜெயம்ரவி.