ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித்தின் தீவிரமான ரசிகர் சிம்பு. அந்த வகையில், அஜித் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகராக இருந்து வருகிறார். அதோடு தான் மட்டுமே தியேட்டருக்கு செல்லாமல், தனது நண்பர்க ளுடன் அஜித் படம் பார்க்க செல்லும் சிம்பு, தன்னை கவர்ந்த காட்சிகள் வரும்போது தன்னை மறந்து விசில் அடித்து ஆர்ப்பாட்டம் செய்வாராம். அந்த அளவுக்கு அஜித் படங்களை என்சாய் பண்ணி பார்த்து ரசித்து வருகிறார் சிம்பு.
அதேபோல் ரஜினி படங்களுக்கும் அவர் தீவிரமான ரசிகர்தான். அந்த வகையில், ஜூலை 22-ந்தேதி வெளியாகும் ரஜினியின் கபாலி படத்தை பார்க்க இப்போதே ஆவலோடு இருந்து வருகிறார் சிம்பு. தான் மட்டுமின்றி, தற்போது தான் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட யூனிட்டில் உள்ள முக்கிய டெக்னீஷியன்களுக்கும் சிம்புவே முதல் நாள் முதல் காட்சி கபாலி படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்து விட்டாராம். இந்த தகவலை அப்பட டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.