ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'கபாலி' படம் பற்றிய பல்வேறு செய்திள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படம் சந்தேகமேயில்லாமல் ஒரு ரஜினிகாந்த் படம்தான். அவருக்கு இருக்கும் புகழும், பரபரப்பும் இந்தப் படத்தை இன்னும் அதிகமாக பேச வைத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம். இதுவரை இல்லாத ரஜினி படம் அளவிற்கு இந்தப் படத்தைப் பேச வைத்த பெருமை படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் சாரும்.
ரஜினி நடித்து இதற்கு முன் வெளிவந்த 'சிவாஜி, எந்திரன்' ஆகிய இரண்டு படங்களும் அதிகமாக பேசப்பட்ட படங்களாக இருந்தன. அந்தப் படங்களை இயக்கியவர் ஷங்கர். அவருடைய பிரம்மாண்டம் இந்த உலகமே அறிந்தது. ஷங்கரின் பிரம்மாண்டமும், ரஜினியின் ஹீரோயிசமும் சேர்ந்து அந்த இரண்டுப் படங்களையும் பேச வைத்தன. 'சிவாஜி' படத்தை இயக்குவதற்கு முன்பே ஷங்கர் பெரிய இயக்குனராக பெயரெடுத்தவர்.
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஷங்கர், மணிரத்னம் ஆகியோர்தான் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்கள் என்ற பெயரை எடுத்துள்ளவர்கள். இப்போது 'கபாலி' படம் மூலம் இதற்கு முன் 'அட்டகத்தி, மெட்ராஸ்' ஆகிய இரண்டு சிறிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் பேசப்பட்டு வருகிறார். இந்த போட்டி நிறைந்த உலகத்தில் அதிலும் குறிப்பாக திரையுலகத்தில் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பை பெருமைப்படும் அளவிற்கு மாற்றியிருக்கிறார் பா.ரஞ்சித்.