ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சீயான விக்ரம் படித்தது ஏற்காடு மான்போர்ட் பள்ளியில். இந்த பள்ளி 1917ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மான்போர்ட் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் வெவ்வேறு துறையில் பெரிய இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். விழாவிற்கு மான்போர்ட் தலைவர் அருட்தந்தை கே.எம்.ஜோசப் தலைமை தாங்குகிறார். ஏற்காடு சபைத் தலைவர் அருட்சகோதரர் பி.ஜே. ஜார்ஜ் முன்னிலை வகிக்கிறார்.
23ந் தேதி நடக்கும் விழாவில் விக்ரமும் கலந்து கொள்கிறார். நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகிறார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுக்குழுவிலும், விளையாட்டு போட்டியிலும் விக்ரம் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.