ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு படம் வெற்றிப்படமா இல்லையா என்பதை பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து எடைபோடுவதைவிட, அப்படத்தின் இயக்குநருக்கு அடுத்தப் படவாய்ப்புக் கிடைப்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம். வெற்றிப்படம் என்று சொல்லப்பட்ட பல படங்களுக்கு அடுத்தப்படமே கிடைக்கவில்லை.
இந்த பட்டியலில்தான் நேற்றுவரை இருந்தார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநரான ராம். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஷ்ணு விஷால், நந்திதா நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'முண்டாசுப்பட்டி'. இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் ராம். காதல், காமெடி கலந்து அவர் உருவாக்கியிருந்த இந்த பீரியட் ஃபிலிம் விமர்சகர்கள் மத்தியில் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதோடு, அந்த வருடத்தின் வெற்றிப்படப்பட்டியலிம் இடம்பிடித்தது. ஆபரேசன் சக்சஸ் பேஷன்ட் அவுட் என்பதைப்போல் முண்டாசுப்பட்டி வெற்றி என்று சொல்லப்பட்ட அதே நேரம், அப்படத்தின் இயக்குநருக்கு அடுத்தப் படம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்குப்பிறகு, இப்போது இயக்குநர் ராமின் அடுத்த படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளன. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிப்பது அறிமுக நடிகர்கள்தானாம். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக உள்ள இப்படத்தில் நாயகனுக்கு போலீஸ் கேரக்டராம்.