மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் கூறினார். தனது கட்சி நிகழ்ச்சிக்காக திருச்சி வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் எங்கு சென்றாலும் சிம்பு திருமணம் பற்றித்தான் கேட்கிறார்கள். அவர் நடித்து வெற்றி பெற்ற 'இது நம்ம ஆளு' படம் பற்றி கேட்பதில்லை. ஒரு வாரம் ஓடுவதே சிரமமான நேரத்தில் 50 நாட்களுக்கு மேல் அந்த படம் ஓடியதை பாராட்ட மறுக்கிறார்கள். சிம்புவை திருமணம் செய்ய ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மனப் பொருத்தம், ஜாதகப் பொருத்தத்துடன் பெண் தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் யாரையாவது காதலித்தால் அந்த பெண்ணையே திருமணம் செய்து வைப்போம். எப்படி வேண்டுமானாலும் நடக்கும்.