மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூலை 22ல் உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் கபாலி படத்தின் விளம்பரங்கள் வெகு விமர்சனையாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் கபாலி படத்தின் தமிழ் பதிப்பு அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு யு சான்றிதழ் பெறப்பட்டது.
இதே தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கபாலி படம் நேற்று தணிக்கைக்குழுவினருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். கபாலி படத்தின் தெலுங்கு உரிமம் எதிர்பார்த்ததற்கும் அதிக தொகைக்கே கைமாற்றப்பட்டது. இருப்பினும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கபாலி படத்திற்கு புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்த தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டாதது போலவே தெரிகிறது.
தமிழ்நாட்டைப் போலவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் ரஜினிகாந்தின் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. கபாலி படத்திற்காக தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் புரமோஷனே போதும் என்பதே இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய தயாரிப்பாளர்களின் எண்ணமாக உள்ளது.