ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெற்றிமாறன் பெரிய பட்ஜெட்டில் இயக்கும் படம் 'வடசென்னை'. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக சமந்தா நடிப்பதாக இருந்தது. தற்போது அமலாபால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடசென்னையில் வரும் இன்னொரு பவர்புல் கேரக்டரில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முயற்சிப்பதாக கூறப்பட்டது.
இயக்குனர் வெற்றிமாறன் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கும் விஜய்சேதுபதி அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அதை மனதில் வைத்து வெற்றிமாறன் அவரை அணுகியதாக கூறப்படுகிறது. முதலில் ஓகே சொன்ன விஜய்சேதுபதி கொடூரமான வில்லன் கேரக்டர் என்றதும் தயங்கியதாக தெரிகிறது. இதற்கிடையில் விஜய்சேதுபதி வட சென்னையில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. அவர் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று படத் தரப்பும், வில்லனாக இல்லை சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று விஜய்சேதுபதி தரப்பும் கூறுகிறது.