ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் 'என்னம்மா கதவுடுறானுங்க'. அர்வி, ஷாலு, அலிஷா, சோப்ரா என்ற புதுமுகங்களுடன் ரவிமரியா, சாம்ஸ், கீதா நடித்துள்ளனர். சிவபாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி விஜய் ஆனந்த் இசை அமைத்துள்ளார். வி.பிரான்சிஸ்ராஜ் இயக்கி உள்ளார்.
“இது பேய் படங்களின் சீசன். இதுவும் பேய் படம்தான் ஆனால் பேய் படங்களை கிண்டல் செய்து ஜாலியாக வரும் பேய் படம். மனிதர்களுக்கு இருப்பது போல் பேய்களுக்கும் காதல், குடும்பம், செண்டிமெண்ட் இருந்தால் எப்படி இருக்கும் என்று காமெடியாக கற்பனை செய்து உருவாகி உள்ள படம். பேய் படம் என்ற பெயரில் மக்களை பயமுறுத்துவதை சுட்டிக் காட்டுகிறோம். ஒருவேளை பேய்கள் இருந்தால் அவைகள் ஏன் மக்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் ராஜ்.