ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியின் ஹிட் பட டைட்டீல்கள், ரஜினியின் பிரபலமான கேரக்டர்களின் பெயரில் படங்களுக்கு டைட்டீல் வைத்து முன்னணி ஹீரோக்கள் நடித்து வரும் நிலையில், ரஜினி நடித்த கெட்டப்புகளில் அப்படியே நடித்து வருகிறார் பவர்ஸ்டார். அந்த வகையில், கிடா பூசாரி மகுடி -என்ற படத்தில் ஜானி படத்தில் ரஜினி நடித்த கெட்டப்பில் நடித்த அவர், அதையடுத்து அட்றா மச்சான் விசிலு படத்தில் சூப்பர் ஸ்டாராகவே நடித்தார்.
இந்த நிலையில், தற்போது கபாலி படத்தில் ரஜினி நடித்துள்ள அதே கெட்டப்பில், கோணலா இருந்தாலும் என்னோடது -என்ற படத்துக்காக ஒரு பாடலில் நடனமாடியிருக்கிறார் பவர்ஸ்டார். அதோடு, கபாலியில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்குகளான கபாலிடா என்பதை பவருடா -என்று பேசியிருக்கும் பவர்ஸ்டார், கபாலி ரஜினியாக அதே நரைமுடி கெட்டப்பில் கூலிங் கிளாஸ் அணிந்து ரஜினி ஸ்டைலில் நடனமாடியிருக்கிறாராம். அந்த படத்தில் அவர் நடித்துள்ள இந்த பாடல் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கும் என்கிறார்கள்.